பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவே வந்தேன் என்று சொல்லளவில் மட்டுமல்ல சீடர்களின் பாதங்களை கழுவி அவ்வார்த்தை களுக்கு நமதாண்டவர் இயேசு தன்னையே தாழ்த்தி உருவம் கொடுத்தவர்…..
ஏனெனில் மனிதர்களான எமது மீட்புக்காக பச்சை மரமாக பெத்லகேமில் பிறந்தவர் தனித்த மரமாக ஜெத்சமெனியில் தவித்த வேளையிலும் “ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா“ என செபிக்கு மாறு எம்மிடம் விண்ணப்பம் செய்த இரவும் இந்த இரவுதான்
ஆண்டவர் இயேசு ஜெத்சமெனியில் பாடுகள்பட்டபோது தலைமைச்சீடர் பேதுருவும் – காட்டிக் கொடுத்த யூதாசும் தாம் யார் என தமது உள்ளார்ந்த மனிதனை உணர்ந்து கொண்ட இரவும் இந்த இரவுதான்